அரசியலில் முழுமையாக இறங்கும்போது நடிக்க எண்ணம் இல்லை – நடிகர் கமல்ஹாசன்

Kamal

விஸ்வரூபம் 2, சபாஷ் நாயூடு, ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் – 2 ஆகிய படத்தில் நடிக்க கமல் ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. மேலும், படங்களில் நடிக்க கமலுக்கு எண்ணம் இல்லையாம். அரசியலில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்க உள்ளார். தமிழ்நாட்டில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வர முழு மூச்சாக செயல்பட இருக்கிறார்.

மக்கள் மகிழ்ச்சியாக, நிம்மதியாக வாழ வேண்டிய இடமாக தமிழ்நாட்டை மாற்றப் போவதாக அவர் கூறி வருகிறார். இதைக் கண்டு ரசிகர்களும் மக்களும் மகிழ்ச்சி அடைந்தாலும் அவர் இனிமேல் திரைப்படத்தில் நடிப்பாரா என்பது சந்தேகம் என்பதால் பலருக்கும் இது வருத்தமாக இருக்கிறது.

நற்பணி மன்றம் மூலம் மக்களுக்கு நன்மைகளைச் செய்து வந்தாலும் அரசியல் மூலம் மக்களுக்குத் தேவையான சேவைகளை செம்மையாக செய்ய அரசியலுக்கு வருகிறார். தனக்கு பின்பும் தன் கட்சியில் இந்த நற்பணிகள் தொடர வேண்டும் என்பது கமலின் விருப்பம்.

அரசியலில் இவ்வளவு ஆர்வத்தைக் காட்டும்போது இனி திரைப்படங்களில் கமல் நடிப்பாரா என்றதற்கு, ‘அரசியலில் முழுமையாக இறங்கும்போது நடிக்க எண்ணம் இல்லை ’ என்றே சொல்கிறார்.

தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதால், அமெரிக்காவில் உள்ள தமிழர்களைச் சந்தித்து அதரவுகளையும் திரட்டி வருகிறார்.

இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் கட்சி குறித்தும் பயண திட்டம் குறித்தும் நற்பணி இயக்க நிர்வாகிகளுடனும் வழக்குரைஞர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Share