கமல் ரஜினி சந்திப்பு… கூட்டணியா? தனிவழியா?

rajini_kamal

நடிகர் ரஜினியை அவரது இல்லத்தில் சென்று நேற்று கமல் சந்தித்துப் பேசினார். இருவரின் சந்திப்பும் இப்போது ஹாட் டாபிக். ஓருவர் சூப்பர் ஸ்டார், இன்னொருவர் உலக நாயகன். இப்படியான இரண்டு முக்கிய நடிகர்கள் ஒரே நேரத்தில் அரசியலில் இறங்குகின்றனர். இந்த மாற்றம் தமிழகத்துக்கான நல்ல மாற்றமா? கமல் ரஜினி சந்திப்பு… கூட்டணியா? தனிவழியா? காலம் பதில் சொல்லும்.

பிப்ரவரி 21-ல் கமல், தன் அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்க இருக்கிறார். அன்று முதல் தன்னுடைய சுற்றுப் பயணத்தையும் தொடங்க இருக்கிறார். இந்த நிலையில் நேற்று தன் வீட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு விருந்து அளித்த கமல். பேட்டி எதுவும் இல்லை. உங்களைச் சந்திப்பதற்காகவே இந்த விருந்து என்று கூறினார்.

விழாவுக்கு அழைப்பு

ரஜினி வீட்டுக்கு சென்ற கமல், 30 நிமிடங்கள் பேச்சு வார்த்தை நடந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சந்திப்புக்கு பின், “எங்கள் இருவருக்கும் இடையில் 40 ஆண்டு கால நட்பு இருக்கிறது. என் அரசியல் பயணத்தின் தொடக்க விழாவில் ரஜினியை வரவேற்பதற்காக ரஜினி வீட்டுக்குச் சென்றேன். பங்கேற்பதும் பங்கேற்காததும் அவரது விருப்பம்” எனக் கமல் சொன்னார்.

இருவரும் தனிவழி

மேலும் இந்த சந்திப்பு குறித்து ரஜினி கூறியது, “கமல் அரசியலுக்குள் இறங்கியிருக்கிறார் அவருக்கு வாழ்த்துகள். கமல் புகழுக்கும், பணத்துக்காகவும் அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலுக்கு வந்திருக்கிறார். சினிமாவைப் போலவே எங்களது இருவரது பாணியும் வெவ்வேறாகவே இருக்கும்” என ரஜினி சொல்லியிருக்கிறார்.

இந்தச் சந்திப்பில் சில முக்கிய விஷயங்களும் பேசப்பட்டிருப்பதாகத் தகவல்…

  • கமல் தொடங்கும் கட்சி உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்க உள்ளது.
  • திராவிட கட்சிகளை வீழ்த்த வேண்டும் என்றும், தமிழகத்துக்கு நல்லதொரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும் சில ஆலோசனைகள் நடந்திருக்கின்றன.
  • உள்ளாட்சி தேர்தலில் கமல் தொடங்கும் கட்சிக்கு ஓட்டு சதவீதத்தைப் பொறுத்து, சட்ட சபை தேர்தலில் கூட்டணி வைக்கலாமா வேண்டாமா என்பதைப் பற்றியும் ஆலோசனை நடந்திருக்கிறதாம்.
  • தற்போதைக்கு இருவரும் தனிவழியில் பயணிக்க உள்ளனர்.
  • மேலும், பத்திரிக்கையாளர்களை அழைத்து தனது வீட்டில் பிரியாணி விருந்து அளித்திருக்கிறார், கமல்.
Share