சிவகார்த்திகேயன் படத்தில் A .R . ரஹ்மான்..

“இன்று நேற்று நாளை”என்ற படத்தை இயக்கியவர் ரவிக்குமார். இவர் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். அதுவும் சயின்ஸ் பிக்ஷன் பற்றிய படம் என்றும் கூறியுள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில், காமெடி நடிகர் கருணாகரன் ஏற்கெனவே ஒப்பந்தமாகியுள்ளார். அதையடுத்து தற்போது இன்னொரு காமெடியனாக யோகி பாபுவும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share