செப் 23 -இல் வடசென்னை பாடல்கள் ரிலீஸ்

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் வடசென்னை.  வடசென்னையை மையமாக வைத்து இப்படம் வெளிவர இருக்கிறது. வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். டானியல் பாலாஜி, சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர், இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் வருகிற செப் – 23 இல் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் படம் அக்டோபர் 17 – இல் வெளிவர உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

Share