தென்றலே

தென்றலே குளிர் தென்றலே

கொஞ்சம் கவியினை சுமந்து செல்வாயோ

என்னவள் அங்கு துடிக்கின்றாள்

அவள் மஞ்சம் குளிர்ந்திட

சொல்வாயோ

கன்னத்தில் அவள் கன்னத்தில்

என் முத்தத்தை பதித்திடு

பூப்போலே

எல்லையை நீயும் மீறினால் 

உனை சிறை பிடிப்பேனே

உயிர் குடிப்பேனே

கண்களில் அவள் கண்களில்

என் காதல் மிளிர்ந்திட

கவியினைச் சொல்

சொன்னதும் அவள் பூரிப்பாள்

அப்புன்னகை போதுமே

என்னுயிர் வாழுமே………..

தென்றலே குளிர் தென்றலே

கொஞ்சம் கவியினை சுமந்து செல்வாயோ!!!!!!!!!

Share