மந்திரப்புன்னகை

அவளின் புன்னகைத்த பூமுகம்
என் நெஞ்சில் நதியலையாய்
மீண்டும் மீண்டும் மோத

சமநிலையில்லா படகினைப்போலே
தத்தளிக்கிறேன் நான்
ஏன் இந்த போராட்டம்

அவள் நினைவினில் என்
நெஞ்சம் ஆடிடும் கொண்டாட்டம்
ஆனந்த கூத்தாட்டம்

வார்த்தைகள் இல்லை
அதை வர்ணிக்க

அய்யோ கடவுளே
எதையும் எடுத்துக்கொள்
என்னுயிரையும் எடுத்துக்கொள்
வரமொன்று தா போதும்

அவள் புன்னகைத்து
என்னைக் கண்ட ஒருநொடி
அந்த ஒரேநொடி மட்டும்

மீண்டும் ஒருமுறை தந்திடு

Share