மந்திரப்புன்னகை

அவளின் புன்னகைத்த பூமுகம் என் நெஞ்சில் நதியலையாய் மீண்டும் மீண்டும் மோத சமநிலையில்லா படகினைப்போலே தத்தளிக்கிறேன் நான் ஏன் இந்த போராட்டம் அவள் நினைவினில் என் நெஞ்சம் ஆடிடும் கொண்டாட்டம் ஆனந்த கூத்தாட்டம் வார்த்தைகள் இல்லை அதை வர்ணிக்க அய்யோ கடவுளே எதையும் எடுத்துக்கொள் என்னுயிரையும் எடுத்துக்கொள் வரமொன்று தா போதும் அவள் புன்னகைத்து என்னைக் கண்ட ஒருநொடி அந்த ஒரேநொடி மட்டும் மீண்டும் ஒருமுறை தந்திடு

Read More

கொஞ்சம் திரும்பி பாரு

அந்த வரப்பு மேல நடந்து போற வாத்தியார் பொண்ணே தமிழ் வாத்தியார் பொண்ணே ஓ அன்ன நடையில கவுந்துபோச்சு கலப்பயுந்தானே ஏரு கலப்பயுந்தானே கொஞ்சம் திரும்பி பாரு என்ன நீயும் குத்தாள நதியே குயில் கொஞ்சுற கிளியே ஓ கண்ணழகுல கெறங்கி போயி கெடக்குறே நானே தனியா தவிக்கிறந்தானே சும்மா சிரிச்சு சிரிச்சு கவுத்திபுட்ட சிங்கார மயிலே சீனிமிட்டாயே ஓ பிண்ணழகுல மயங்கி தயங்கி மண்ணுல விழுந்தே காதல் மழையில நனஞ்சே

Read More

தென்றலே

தென்றலே குளிர் தென்றலே கொஞ்சம் கவியினை சுமந்து செல்வாயோ என்னவள் அங்கு துடிக்கின்றாள் அவள் மஞ்சம் குளிர்ந்திட சொல்வாயோ கன்னத்தில் அவள் கன்னத்தில் என் முத்தத்தை பதித்திடு பூப்போலே எல்லையை நீயும் மீறினால்  உனை சிறை பிடிப்பேனே உயிர் குடிப்பேனே கண்களில் அவள் கண்களில் என் காதல் மிளிர்ந்திட கவியினைச் சொல் சொன்னதும் அவள் பூரிப்பாள் அப்புன்னகை போதுமே என்னுயிர் வாழுமே……….. தென்றலே குளிர் தென்றலே கொஞ்சம் கவியினை சுமந்து செல்வாயோ!!!!!!!!!

Read More

கொளுத்துவோம்

கொளுத்துவோம் மடமையைக் கொளுத்துவோம் மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் மக்காத உரமாய் மண்ணில் தோன்றி மழலை பூவாய் மலர்வாள் அவள் அம்மா என்பாள் அப்பா என்பாள் ஆழிப்பெருக்காய் அன்பினை பொய்யும் அழகுப்பெட்டகம் அவள் பருவத்தில் பூப்பெய்வாள் வெட்கமும் கொள்வாள் பட்டங்களை மகுடங்களை புன்னகையில் ஏந்திச்செல்வாள் சாதிக்க பிறந்தவள் அவள் சாதனைகள் புரிந்தவள் அவள் சாதுவாய் சரித்திரம் படைக்கும் சக்தியும் அவள் மகத்தான கருவினை மனதாற சுமப்பவள் அவள் தாளா துயர் தாங்கி தன்னுயிரை பிரிப்பாள் அவள் வெண்குருதி பாலூட்டி வெளிர் பஞ்சாய் தாலாட்டி மழலை புன்னகையில் மத்தாப்பாய் மலர்வாள் அவள் அவளே தான் ஆதியும் மீதியும் அவளே தான் பெண்மையும் அவளே தான் …

Read More

மாயம் என்னவோ !

மங்கையின் மைவிழியில் மயங்கித்தான் போனேன் மாயம் என்னவோ ! மேக மின்னலோ வேகமாய் வெட்கம் கொள்ளும் வெண்ணிலவின் புன்னகை பொன்சிலையின் சிறுநகை எனை சாய்க்கும் தென்றலோ

Read More

என் மரணக் கட்டுரை

திடீரென நேர்ந்துவிட்டது என் #மரணம். நான் இறந்தேனா கொல்லப்பட்டேனா தற்கொலை செய்து கொண்டேனா எதுவும் புரியாமல் ஒரே குழப்பமாயிருந்தது. குழப்பத்தில் மண்டை வெடித்து விடுமோ என்ற பயம் வேறு பீதியை கிளப்பியது. “அய்யோ சொல்லுங்கள் நான் எப்படி இறந்தேன்” என சுற்றியிருந்தவர்களிடம் …

Read More

மறந்துவிடாதடி!!!……

கடிகார அவசர வினாடிகளுடன் உன் ஒப்பனை நடத்தும் போட்டியில் ஏக்கப் பார்வையாளனாய் உன் நிலைக்கண்ணாடிப் பொட்டு. மறந்துவிடாதடி!!!…… – இன்றாவது உன் முகநிலவில் கலர்மச்சம் உதிக்கட்டும்

Read More

மகளிர் தினம் 2018

கொளுத்துவோம் மடமையைக் கொளுத்துவோம் மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் மக்காத உரமாய் மண்ணில் தோன்றி மழலை பூவாய் மலர்வாள் அவள் அம்மா என்பாள் அப்பா என்பாள் ஆழிப்பெருக்காய் அன்பினை பொய்யும் அழகுப்பெட்டகம் அவள் பருவத்தில் பூப்பெய்வாள் வெட்கமும் கொள்வாள் …

Read More
Hope

தயக்கம் ஏனடா

தயக்கம் ஏனடா தோழா எந்தன் தோழா தயக்கம் ஏனடா தோல்வியே உன் தோழமை முன்னேறிப்போடா தாயின் கருவறையை உள்ளுடைத்து வெளி கண்டவன் நீ வாழப்பிறந்தவன் நீ அர்த்தமில்லா வார்த்தைகளும் கேலி கிண்டலும் அசைத்திடுமோ உந்தன் நம்பிக்கையை முற்கள் தைத்தால் என்ன உன் …

Read More

உன் அன்பு ……

உன் அன்பு என்னும் மழையால் என்னை நனைத்து விட்டு… மறுகணமே என்னை விட்டு பிரிந்து தூரமாய் செல்வது எப்படி என்று எண்ணுகின்றாய்… அந்த மழை மேகம் போல் !   என் மனதுக்குள் மீண்டும் மீண்டும் படித்துப் பார்க்கின்றேன்…. உன் விழி …

Read More