மந்திரப்புன்னகை

அவளின் புன்னகைத்த பூமுகம் என் நெஞ்சில் நதியலையாய் மீண்டும் மீண்டும் மோத சமநிலையில்லா படகினைப்போலே தத்தளிக்கிறேன் நான் ஏன் இந்த போராட்டம் அவள் நினைவினில் என் நெஞ்சம் ஆடிடும் கொண்டாட்டம் ஆனந்த கூத்தாட்டம் வார்த்தைகள் இல்லை அதை வர்ணிக்க அய்யோ கடவுளே எதையும் எடுத்துக்கொள் என்னுயிரையும் எடுத்துக்கொள் வரமொன்று தா போதும் அவள் புன்னகைத்து என்னைக் கண்ட ஒருநொடி அந்த ஒரேநொடி மட்டும் மீண்டும் ஒருமுறை தந்திடு

Read More

கொஞ்சம் திரும்பி பாரு

அந்த வரப்பு மேல நடந்து போற வாத்தியார் பொண்ணே தமிழ் வாத்தியார் பொண்ணே ஓ அன்ன நடையில கவுந்துபோச்சு கலப்பயுந்தானே ஏரு கலப்பயுந்தானே கொஞ்சம் திரும்பி பாரு என்ன நீயும் குத்தாள நதியே குயில் கொஞ்சுற கிளியே ஓ கண்ணழகுல கெறங்கி போயி கெடக்குறே நானே தனியா தவிக்கிறந்தானே சும்மா சிரிச்சு சிரிச்சு கவுத்திபுட்ட சிங்கார மயிலே சீனிமிட்டாயே ஓ பிண்ணழகுல மயங்கி தயங்கி மண்ணுல விழுந்தே காதல் மழையில நனஞ்சே

Read More

தென்றலே

தென்றலே குளிர் தென்றலே கொஞ்சம் கவியினை சுமந்து செல்வாயோ என்னவள் அங்கு துடிக்கின்றாள் அவள் மஞ்சம் குளிர்ந்திட சொல்வாயோ கன்னத்தில் அவள் கன்னத்தில் என் முத்தத்தை பதித்திடு பூப்போலே எல்லையை நீயும் மீறினால்  உனை சிறை பிடிப்பேனே உயிர் குடிப்பேனே கண்களில் அவள் கண்களில் என் காதல் மிளிர்ந்திட கவியினைச் சொல் சொன்னதும் அவள் பூரிப்பாள் அப்புன்னகை போதுமே என்னுயிர் வாழுமே……….. தென்றலே குளிர் தென்றலே கொஞ்சம் கவியினை சுமந்து செல்வாயோ!!!!!!!!!

Read More

கொளுத்துவோம்

கொளுத்துவோம் மடமையைக் கொளுத்துவோம் மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் மக்காத உரமாய் மண்ணில் தோன்றி மழலை பூவாய் மலர்வாள் அவள் அம்மா என்பாள் அப்பா என்பாள் ஆழிப்பெருக்காய் அன்பினை பொய்யும் அழகுப்பெட்டகம் அவள் பருவத்தில் பூப்பெய்வாள் வெட்கமும் கொள்வாள் பட்டங்களை மகுடங்களை புன்னகையில் ஏந்திச்செல்வாள் சாதிக்க பிறந்தவள் அவள் சாதனைகள் புரிந்தவள் அவள் சாதுவாய் சரித்திரம் படைக்கும் சக்தியும் அவள் மகத்தான கருவினை மனதாற சுமப்பவள் அவள் தாளா துயர் தாங்கி தன்னுயிரை பிரிப்பாள் அவள் வெண்குருதி பாலூட்டி வெளிர் பஞ்சாய் தாலாட்டி மழலை புன்னகையில் மத்தாப்பாய் மலர்வாள் அவள் அவளே தான் ஆதியும் மீதியும் அவளே தான் பெண்மையும் அவளே தான் …

Read More

தமிழில் தேசிய கீதத்தை பாடி அசத்திய ஆசிரியை

தமிழில் தேசிய கீதத்தை பாடி அசத்திய ஆசிரியை Posted by நாணல் on Sunday, February 25, 2018 இணையத்தில் பரவும் தமிழ் தேசிய கீதம் வீடியோ. அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியை அழகாக நமது தேசிய கீதத்தை தமிழில் …

Read More

என் மரணக் கட்டுரை

திடீரென நேர்ந்துவிட்டது என் #மரணம். நான் இறந்தேனா கொல்லப்பட்டேனா தற்கொலை செய்து கொண்டேனா எதுவும் புரியாமல் ஒரே குழப்பமாயிருந்தது. குழப்பத்தில் மண்டை வெடித்து விடுமோ என்ற பயம் வேறு பீதியை கிளப்பியது. “அய்யோ சொல்லுங்கள் நான் எப்படி இறந்தேன்” என சுற்றியிருந்தவர்களிடம் …

Read More
Hope

தயக்கம் ஏனடா

தயக்கம் ஏனடா தோழா எந்தன் தோழா தயக்கம் ஏனடா தோல்வியே உன் தோழமை முன்னேறிப்போடா தாயின் கருவறையை உள்ளுடைத்து வெளி கண்டவன் நீ வாழப்பிறந்தவன் நீ அர்த்தமில்லா வார்த்தைகளும் கேலி கிண்டலும் அசைத்திடுமோ உந்தன் நம்பிக்கையை முற்கள் தைத்தால் என்ன உன் …

Read More
warrior diet

மூன்று வேளைச் சாப்பிட்டும் உடல் எடையைக் குறைக்கலாம்… அதுதான் ‘வாரியர் டயட்’…

மூன்று வேளை உணவு. முக்கால் மணி நேரத்துக்கு ஒரு முறை காபி/டீ. அரை நாளில் பஜ்ஜி, போண்டா, வடை. போரடித்தால் சமோசா. இப்படித் தொடர்ந்து வயிற்றை நிரப்பிக் கொண்டே இருந்தால் நோய்கள் வருமே தவிர குறையாது. கொஞ்சம் டயட் இருந்து பாருங்கள். …

Read More